Breaking News

#காஷ்மீர்_பிரச்சனை_சிறப்பு_பதிவு

#காஷ்மீர்_பிரச்சனை_சிறப்பு_பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசன சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும்35Aவீன் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் நேற்று முதல் ரத்து செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய தவறு போல சித்தரிக்கபடுகிறது.
உண்மையில் இது நாட்டின் ஒற்றுமைக்கும், சமுகநீதிக்கும் குந்தகம் விளைவிக்கும் பிரிவாகும். இந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பல வகையில் பாதித்துள்ளது.

தொழில் வளர்ச்சி இல்லை ,
கல்விக்கு உரிமை கோர முடியாது,
தீண்டாமை சட்டங்கள்,
சிறுபான்மையினருக்கான சட்டங்கள் போன்றவை அங்கே செல்லாது.
 370 பிரிவின் ஒரு கொடுமை என்னவென்றால் ஒரு காஷ்மீரி இந்தியாவின் மற்ற மாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் அவரது காஷ்மீரிய குடியுரிமை போய்விடும். ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தானியர் ஒருவரை திருமணம் செய்தால் அவருக்கு இந்திய குடியுரிமை மற்றும் பாகிஸ்தானிய குடியுரிமை இரண்டும் சேர்த்தே கிடைக்க பெறும்.

அதேல்லாம் தெரியாது இது தவறு, காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பலர் கூற கேட்டிருப்பீர்கள்.

அது நடைமுறையில் சாத்தியமற்றது காரணம் காஷ்மீர் இன்று பாகிஸ்தான் வசமும் இந்தியா வசமும் உள்ளது.

ஐ.நா விதிகளின்படி ஒருங்கிணைந்த காஷ்மீரில் மட்டுமே வாக்கெடுப்பு நடத்த முடியும். ஆனால் இந்தியா  நேரு காலத்தில் அதற்கு இந்தியா தயாராக இருந்த போதிலும் பாகிஸ்தான் தயாராக இல்லை ஏனெனில் காஷ்மீரை மொத்தமாக கபளீகரம் செய்யும் எண்ணத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்தியா பின்வாங்கினால் பாகிஸ்தான் அபகரித்து கொள்ளும் இதனால் இந்தியாவும் அப்படியே இருந்து விட்டது.

தற்போது சீனாவும் CPEC மூலம் பாகிஸ்தானுடன் இணைந்து விட்டதால் இனி இது சாத்தியமே இல்லாத ஒன்று .

இந்த பொது வாக்கெடுப்பை நடத்த முடியாத காரணத்தால் மஹாராஜா ஹரிசிங் நியமித்த காஷ்மீர் பிரதமரான  ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முழு ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றும் நயவஞ்சக நோக்கத்துடன் 370ஆவது சிறப்பு சட்டபிரிவை இயற்றும்படி  நேருவிடம் கோரினார். அதன்படி திரு கோபால ஸ்வாமி அய்யங்கார் அவர்கள் இந்த வரைவை வடிவமைத்து கொடுத்தார். இப்படி  ஷேக் அப்துல்லாவின் சொந்த திருப்திகாக சிறப்பு சட்ட பிரிவு 370 மற்றும் 35A கடும் எதிர்ப்புக்கு இடையே இயற்றப்பட்டது.நேருவும் அப்துல்லாவும் உற்ற நண்பர்கள்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கே தெரிவிக்காமல் நேரு கோபால ஸ்வாமி அய்யங்காரை வைத்து வரைவை வடிவமைத்தது ஆகும்.
இதனை அறிந்து நேருவிடம் கேள்வி எழுப்பினார் சர்தார் வல்லபாய் பட்டேல் , அதற்கு நேரு இது என்னுடைய நேரடி மேற்பாற்வையின் கீழ் நடைபெறும் ஒன்று எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி சர்தார் வல்லபாய் பட்டேல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பின்னர் இருவரையும் சேர்த்து வைக்க காந்தியடிகள் முயற்சித்தது எல்லாம் வேறு கதை.

அதைப்போல நேருவின் அமைச்சரவையில் தொழில் துறை மந்திரியாக இருந்த   திரு ஷியாம் பிரசாத் முகர்ஜி இதனை கடுமையாக எதிர்த்தார். இதனை கண்டித்து தனது பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு புத அமைப்பை தொடங்கினார்.அது தான் பின்னாளில் பாரதீய ஜனதா கட்சி ஆக மாற்றம் பெற்றது.

#குறிப்பு ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும், அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திலேயே இந்த 370ஆவது வரைவு கிழித்தெறியப்பட்டது.
இதை சர்தார் வல்லபாய் பட்டேலின் முதன்மை உதவியாளரான வி. ஷங்கர் IAS தனது குறிப்புகளில் இவ்வாறு குறிப்பிடுகிறார் “எனது வாழ்நாளில் நான் இவ்வளவு தீவிரமான காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை பார்த்ததில்லை” காரணம் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிராக கொதித்து போய் இருந்தது.

எண்ணம் போல் வாழ்வு என்ற வகையில் சிறப்பு அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ஒரு வழியாக பல சிக்கல்களை தாண்டி அமலுக்கு வந்தவுடன் ஷேக் அப்துல்லா மகாராஜா ஹரிசிங் உடைய வம்சாவளி உரிமையை ரத்து செய்துவிட்டு தன்னை தானே காஷ்மீரின் சதார் இ ரியாஸாத் ஆக பிரகடனம் செய்து கொண்டார். இல்லையெல் மகாராஜா ஹரிசிங் அல்லது அவரது வம்சாவளி அரசர்களுக்கு காஷ்மீர் அரசு அரசகுடும்பத்திற்கு உரிய அந்தஸ்தை கொடுக்க வேண்டும். இதன்பிறகு மகாராஜா ஹரிசிங் தனது அரச பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு காஷ்மீரை விட்டு வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு மும்பையில் குடியேறினார். அவரது மகன் கரண்சிங் தனது தந்தைக்காக ஷேக் அப்துல்லாவை பழிவாங்கிய கதை சுவாரஸ்யமானது.

மகாராஜா ஹரிசிங்  ஃபிரான்ஸ்  கான் நகரில் வசித்து வந்த நேரம் மகனாக கரண் சிங் பிறந்தார். 1952ஆம் ஆண்டு காஷ்மீரின் சதார் இ ரியாஸாத் ஆக பொறுப்பேற்றார் , பின்னர் 1965ல் காஷ்மீரின் முதல் ஆளுனராக பதவி ஏற்றார். அதன் பிறகு அவர் ஷேக் அப்துல்லாவை பிரதமர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்து சிறையில் அடைத்து பின்னர் காஷ்மீரை விட்டே வெளியேற்றினார். இதிலிருந்தே சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.இப்படி தான்  தனது தந்தைக்கு நேர்ந்த அநியாயத்துக்கு ஷேக் அப்துல்லாவை  கரண்சிங் பழிவாங்கினார்.
கரண்சிங் அவர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தனி ஒருவரின் (ஷேக் அப்துல்லா) அரசியல் லாபத்துக்காக 370 அமல்படுத்தபட்டது. மாறாக அது இந்திய காஷ்மீர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என தவறாக கற்பிக்க படுகிறது.

இந்த பொய்யை மேற்கோள் காட்டி தான் காஷ்மீர் இளைஞர்கள் மூளை சலவை செய்யபடுகின்றனர். இதை தான் இங்கே சிலர் பரப்பவும் செய்கிறார்கள்.

சரியாக 1947 முதல் காஷ்மீர் மீது கண் வைத்து காத்திருக்கும் நாடு பாகிஸ்தான் அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காது .

நாம் பாகிஸ்தானுடன் போரிட்ட நான்கு போர்களில் மூன்று போர்கள் காஷ்மீர் அல்லது காஷ்மீரின் பகுதிகளை  கைப்பற்ற பாகிஸ்தான் நடத்திய போர்களாகும்.
நன்றாக கவனியுங்கள் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியா ஒரு முறை கூட முயற்சிக்காத நிலையில் பாகிஸ்தான் நம் வசம் இருக்கும் காஷ்மீரை அபகரிக்க 3 போர்களையே நடத்தி, இன்று வரை காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து (proxy war) நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறது  தெளிவாகிறது.

பாகிஸ்தானின் இந்த முயற்சி இன்றும் தொடர்கிறது. 1988ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஜியா உல் ஹக் காலத்த்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ். ஐ பாக் ராணுவத்தின் அதவியோடு “ஆபரேஷன் டுபாக்” (Operation Tupac) என்கிற பெயரில் திட்டம் ஒன்றை செயல்படுத்தியது.

அந்த திட்டத்திற்கு மூன்று இலக்குகள் உண்டு அவை,

1) Disintegrate India – இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பது.

2)To utilize the spy network to act as an instrument of sabotage –
ஐ.எஸ்.ஐ தனது உளவாளிகள் மூலம் இந்தியாவில் நாசகார செயல்களை நடத்துவது (குண்டுவெடிப்பு, கலவரங்கள்)

3) to exploit porous borders with Nepal and Bangladesh to set up bases and conduct operations –
நேபாளம் மற்றும் வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள்  ஊடுருவி தளங்கள் அமைத்து திட்டங்களை செயல்படுத்துவது.

இதில் முதலாவது இலக்கை கவனிக்கவும் #இந்தியாவை_துண்டு_துண்டாக_உடைப்பது
இத்திட்டம் ஏறத்தாழ 40வருடமாக நடைமுறையில் உள்ளது.

இதற்கும் காஷ்மீருக்கும் ஒரு சிறப்பான தொடர்பு உள்ளது அது என்னவென்றால்,

இத்திட்டத்தின் கீழ் தான்
1)ஹிஸ்புல் முஜாஹீதீன் ,
2)லஷ்கர் இ தொய்பா ,
3)ஜெய்ஷ் இ முஹம்மது,
4)ஹர்கத் உல் மூஜாஹீதின்,
5)அல் பாதர்,
6)ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி
என ஆறு பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ உருவாக்கியது.

மேலும் காஷ்மீரில் இந்த பயங்கரவாத இயக்கங்களுடைய நடவடிக்கைகள் சீரும் சிறப்புமாக நடக்க ஒவ்வொரு மாதமும் 2.4 கோடி ரூபாய் வரை  காஷ்மீரில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கு ஹவாலா வழியாக பாகிஸ்தானின் ஐ.எஸ். ஐ அனுப்புகிறது.

இந்த பாகிஸ்தான் ஆதரவாளர்கள் யார் என்றால் இன்றைக்கு காஷ்மீரில் ஓப்பாரி வைத்து கொண்டிருப்பவர்கள் தான். மிர்வாயிஸ் உமர் ஃபருக், யாசின் மாலிக் , சயத் அலி ஷா கிலானி , மஸரத் ஆலம் ,  அஸியா அந்த்ராபி , ஷாபிர் ஷா அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தானில் கொல்லபட்ட இல்யாஸ் கஷ்மீரி இன்னும் பலர்.

இவர்கள் அனைவருமே காஷ்மீர் பாகிஸ்தானுடையது என பகிரங்கமாக பிரகடனம் செய்யும் பாகிஸ்தான் அடிமைகள்.
பாகிஸ்தான் நிழலில் வாழ்பவர்கள்.

இல்யாஸ் கஷ்மீரி மட்டும் இவர்கள் அனைவருக்கும் மேல்.காரணம் ஒசாமா பின் லேடனுக்கு பின் அல் காய்தா அமைப்பிற்கு தலைவராக வந்திருக்க வேண்டியவன். அவ்வளவு சிறந்த தரமான பாகிஸ்தான் தயாரிப்பு அவன்.

சரி இல்யாஸ் காஷ்மீரி தவிர்த்து மற்றவர்களின் பணி என்பதை காண்போம்.

ராவில்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் தீட்டும் திட்டங்களை காஷ்மீரில் தங்கு தடையில்லாமல் பயங்கரவாதிகள் நிறைவேற்றுவதற்கு இவர்கள் உதவ வேண்டும்.

ஹவாலா முகவர்கள் வழியாக கிடைக்கும் பணத்தை எல்லாம் இவர்கள்  பயங்கரவாதிகளுக்கு கொடுப்பது,
இளைஞர்களை மூளை சலவை செய்வது ,
போன்ற பணிகளை திறம்பட செய்கிறார்கள் .பின்னர் ராணுவம் சுற்றி வளைத்து மரணத்தின் விளிம்பில் இருக்கும் பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்கு மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களை அனுப்பி கல்லெறிய வைப்பார்கள்.

ஒன்றை சிந்தித்து பாருங்கள்,
சாதாரண மனிதனால் தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் வரை கல்லெறிய முடியாது. ஆனால் இந்த இளைஞர்களுக்கு இது சாத்தியமாகிறது. காரணம் இவர்களுக்கு உடல் சோர்வோ, வலியோ தெரியாமலிருக்க பாகிஸ்தானிலிருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் கடத்தி வரும் கஞ்சா மற்றும் இன்ன பிற போதை பொருட்களை கொடுத்து பழக்கி வைத்திருக்கிறார்கள் .

இந்த கஞ்சாவின் பிறப்பிடம் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம் அல்லது கைபர் பக்தூன்வா மாநிலம். மேலும் கல்லெறிய நாளொன்றுக்கு ருபாய் 500 முதல் 1000 வரை சம்பளமாக கொடுக்கபடுகிறது. இதை அந்த இளைஞர்களே கூறுகிறார்கள் . வெறும் கற்கள் மட்டுமல்ல பெட்ரோல் குண்டுகள் , திராவகம் (ஆசிட்) ஆகியற்றை கொண்டு படைவீரர்களை கொடுரமான முறையில் தாக்கும் அளவுக்கு செல்கிறார்கள்.

இந்தியாவில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மிக மிக மோசமான போதை பொருள் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. இதை தற்போதைய காங்கிரஸ்  கட்சியை சார்ந்த பஞ்சாப் முதல்வரான முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் அமரீந்தர் சிங் சில வருடம் முன்பு கூறினார்.பஞ்சாப் மாநிலமும் மிக மோசமான போதை பொருள் பிரச்சினையை சந்தித்துள்ளது. இதுவே காஷ்மீரில் போதை பொருள் புழக்கம் பற்றி அவர் கூறியதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இப்படி பாகிஸ்தானும் அவர்களின் காஷ்மீர் கைகூலிகளும் தங்கள் சுய லாபத்துக்காக இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை அடியோடு நாசம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் தான் இந்திய கொடியை எரிப்பது, பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது , பயங்கரவாதிகளை தப்பிக்க வைப்பது , ராணுவம் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் காஷ்மீரிகளை கடத்தி கொடுரமாக கொலை செய்வது , தேசபற்றுமிக்க பல இளைஞர்களை கொலை செய்வது அடித்து கொடுர காயங்களை ஏற்படுத்துவது என சகல அட்டுழியங்களையும் செய்கிறார்கள்.
தேசிய கொடி ஏற்றியதற்காக ஶ்ரீநகரை சார்ந்த ஒரு காஷ்மீர் இஸ்லாமிய நண்பரின் கையை ஒடித்த கயவர்கள் தான் ஹூரியத் அமைப்பினர்.

 சரி காஷ்மீர் போராட்டம் என கூறுகிறார்கள் ஆனால் அங்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு என்ன வேலை ??

இன்றுவரை 3000த்திற்கும் அதிகமான வெளிநாட்டு பயங்கரவாதிகளை ராணுவம் ,துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை ஆகியவை இணைந்து கொன்றுள்ளன.

கொல்லப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நாடுகளாவன,
பாகிஸ்தான், எகிப்து, பஹ்ரைன், லெபனான்,ஆப்கானிஸ்தான், சூடான், ஏமன், தஜிகிஸ்தான், துருக்கி,உஸ்பெகிஸ்தான், ஈரான்,நைஜீரியா,வங்காளதேசம்,அல்ஜீரியா, சவுதி அரேபியா, இங்கிலாந்து,நேபாளம், ஈராக், செச்சேன் பயங்கரவாதிகள் உட்பட அடையாளம் காணப்படாத வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஏராளம்.

இத்தனை நாட்டு பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரில் என்ன வேலை ?? பாகிஸ்தான் மற்றும் உள்ளுர் துரோகிகள் உதவியுடன் பிரிவினை வளர்ப்பதே இவர்கள் பணி.

இந்த துரோகிகளில் பலர் 1948 போரில் படையெடுத்து வந்த பாகிஸ்தானிய ரஜாக்கர்கள், தோல்விக்கு பின் இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பிக்க மக்களுடன் மக்களாக ஒளிந்து கொண்டவர்கள். இவர்கள் தான் வடக்கு காஷ்மீரில் பிரிவினையையும் கலவரத்தையும் விதைத்தவர்கள். இன்றும் இவர்கள் தங்கள் தகப்பன் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவர் தான் சயத் அலி ஷா கிலானி நாங்கள் பாகிஸ்தானியர்கள் என பகிரங்கமாக பிரகடனம் செய்தவர்.

யாசின் மாலிக் ஒருபடி மேலே சென்று இந்தியாவில் பல கொடுர தாக்குதல்களை நிகழ்த்தி உள்ள லஷ்கர் இ தொய்பா வின் தலைவன் ஹபீஸ் சயீத் உடன் பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவன்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்களுக்கும் இந்திய குடியுரிமை உண்டு.

காஷ்மீரில் நடக்கும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் ஒன்று வால்மீகி எனும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் மீது திணிக்கப்படும்  கொடுமைகள் ஆகும்.

1957 ஆம் ஆண்டு காஷ்மீர் பிரதமராக இருந்த தேசிய மாநாட்டு கட்சியின் குலாம் பக்ஷி முஹமது , ஶ்ரீநகர் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட துப்புரவு பணிகள் நடைபெறாமல் மிக்பெரிய சுகாதார பிரச்சினை ஏற்பட்டது . அதனை சரி செய்ய பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வால்மீகி எனும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு காஷ்மீரில் துப்புரவு பணி வழங்கி வீடு கட்ட நிலமும் கொடுக்கிறார்.

ஆனால் 1954ஆம் ஆண்டு 370 உடன் சேர்க்கப்பட்ட 35A பிரிவு காஷ்மீரின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கே வேலை என நிபந்தனை விதிப்பதால். அதை  வால்மீகி மக்களுக்காக சற்றே ஒரு வஞ்சகமான நிபந்தனையுடன் தளர்த்துகிறார்.

அதாவது துப்புரவு பணியாளர்களுக்கே நிரந்தர குடியுரிமை என்பதே அது. முதல் தலைமுறை மக்கள் ஏழைகள் அவர்களுக்கு அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியால் இந்த நிபந்தனையின் விளைவுகளை சிந்திக்கவில்லை .

அடுத்த தலைமுறை வால்மீகி மக்களுக்கு
முதுகலை பட்டபடிப்புகள் படிக்க முடியவில்லை,  காரணம் காஷ்மீர் பல்கலைகழங்கள் நிரந்தர குடியுரிமை கேட்டன.இந்த இரண்டாம் தலைமுறை வால்மீகி மக்கள் துப்புரவு பணியில் இணையாமல் வேறு பணிகளில் சேர விரும்பியதால் நிரந்தர குடியரிமை வழங்கப்படாது. நிரந்தர குடியுரிமை இல்லாத காரணத்தால் இவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான “SC” சான்றிதழ் கிடைக்காது.

இதற்கு காரணமான அரசியல் சாசன பிரிவு 35A வால் மீறப்படும் மற்ற  அரசியல் சாசன பிரிவுகள்,

அரசியல் சாசன பிரிவு 15: சாதி, மதம், இனம்,பாலினம் மற்றும் பிறப்பிடம் ரீதியான தீண்டாமை குற்றங்களுக்கு தண்டனை இல்லை.

அரசியல் சாசன பிரிவு 16: வேலைவாய்ப்பில் சம உரிமை இல்லை.

அரசியல் சாசன பிரிவு 23: மனித கடத்தல், பிச்சையெடுக்க வைத்தல், வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் வேலைவாய்ப்பு ஆகியவை குற்றமில்லை. (வால்மீகி மக்கள் தலைமுறை தலைமுறையாக துப்புரவு பணி செய்ய கட்டாயபடுத்த படுகிறார்கள்).

நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவர், பொறியாளர், அரசு அதிகாரிகள், ஏன் தங்களுக்கு பிடித்த தொழில் செய்து முன்னேற்றம் பெற்ற கதைகள் பல உண்டு ஆனால் இது எதுவும் காஷ்மீரில் சாத்தியம் இல்லை.

மேலும் நிரந்தர குடியுரிமை மற்றும் சாதி சான்றிதழ் போன்றவை இல்லாத காரணத்தால் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு கிடைக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் , பாதுகாப்பு எதுவுமே இவர்களுக்கு கிடைக்கவில்லை மாறாக துப்புரவு பணி ஒன்றே இவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் குடிமகனுக்கு உண்டான அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஓட்டுரிமை கூட இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வறுமை வேறு இவர்களை வாட்டுகிறது அதிலிருந்து விடுபட தொழில் தொடங்கலாம் என வங்கியில் சென்று தொழில்  கடன் கூட இந்த மக்களால் வாங்க முடியாது.

இப்படி ஒரு மோசமான பிரிவு தான் 370இன் பங்காளி 35A

இதையல்லவா இங்கிருப்பவர்கள் தட்டி கேட்க வேண்டும் ?? அதை விடுத்து பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்.

சரி இனி சீனா காஷ்மீர் பிரச்சினைக்குள் வந்தது எப்படி என பார்ப்போம்,

பாகிஸ்தானின் க்வதர் துறைமுகம் முதல் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் வழியாக சீனா அபகரித்து வைத்துள்ள திபெத் வழியாக சீனாவின் சின்ஜீயாங் மாகாணம் வரை சீன பாகிஸ்தான் பொருளாதார பாதையை (CHINA PAKISTAN ECONOMIC CORRIDOR- CPEC) சுமார் 5லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சீனா நிர்மானித்து வருகிறது. இப்போது காஷ்மீர் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய காஷ்மீர் அமைதியாக இருந்தால் இந்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது கவனம் செலுத்த கூடும். அப்படி செய்தால் CPEC பாதிக்கப்படும்.இதற்காகவே காஷ்மீரை கொதி நிலையில் வைத்து  இந்த இரு நாடுகளும் காஷ்மீரில் குருதியை ஒட விடுகின்றன.

இவர்களின் எண்ணம், ஒன்று காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தான் கைகளுக்கு செல்ல வேண்டும் அல்லது இந்திய காஷ்மீர் அமைதியை காணவே கூடாது என்பதில் இரு நாடுகளும் கைகோர்த்து கொண்டுள்ளன. சீனாவின் சர்வ ஆசியோடு தான் பாகிஸ்தான் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளை சீனா ஐ.நா வில் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று பிரிவுகளை உடையது
1, ஜம்மு
2, காஷ்மீர் பள்ளத்தாக்கு
3, லடாக்

இதில் ஜம்மு பிரிவில்
கிஷ்த்வார், ஜம்மு, சம்பா, உதம்பூர், ரியாசி, ரஜோவ்ரி, பூஞ்ச், தோடா, ரம்பான்  மற்றும் கத்துவா ஆகிய பத்து மாவட்டங்களும் ,

காஷ்மீர் பள்ளத்தாக்கு பிரிவில் ,
அனந்த்னாக், பாரமுல்லா , பட்காம், பந்திபோர், கந்தர்பால், குப்வாரா, குல்காம், புல்வாமா, ஷோபியான் மற்றும் ஶ்ரீநகர் ஆகிய 10 மாவட்டங்களும்

லடாக் பிரிவில் லே, கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்களும் ஆக மொத்தம் 22மாவட்டங்கள் உள்ளன.

இதில் லடாக் பிரிவில் பயங்கரவாதம் பிரிவினைவாதம் துளியும் இல்லை .

ஜம்மு பிரிவில் எல்லை தாண்டி ஊடுருவி வரும் பயங்கரவாதிகளால் பிரச்சினை உண்டு ஆனால் பொதுமக்கள் பயங்கரவாதிகளை வெறுக்கிறார்கள். துளியும் ஆதரவு இல்லை.

ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பிரிவில்
உள்ள 10 மாவட்டங்களிலும் பயங்கரவாதம் ஆழமாக வேருன்றி உள்ளது. பிரிவினைவாத பாகிஸ்தான் அடிமை தலைவர்கள் மற்றும் ஏமாற்றி வைக்கப்பட்டுள்ள மக்கள் ஆதரவு இங்கு பயங்கரவாதிகளுக்கு மிக அதிகம்.
இங்கேயும் நாட்டுபற்றுமிக்க காஷ்மீரி இஸ்லாமியர்கள் பலர் உண்டு. ஆனால் அவர்களை கொலை செய்யும் அளவுக்கு மோசமானவர்கள் இந்த பாகிஸ்தான் கைகூலிகள்.

இந்த ஒரு பிரிவில் (காஷ்மீர் பள்ளதாக்கு) நடக்கும் பிரச்சினையை ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் பற்றி எரிவது போல காண்பிப்பது ஊடகம் மற்றும் உள்நாட்டு பயங்கரவாதிகள்.

மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளை (ஜம்மு மற்றும் லடாக்) சார்ந்த மக்களுக்கு 370 நீக்கப்பட்டதில் எந்த வருத்தமும் இல்லை . இரு பகுதிகளிலும் கொண்டாடட்டங்கள் களை கட்டி உள்ளன. மக்கள் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஆரவாரத்துடன் உள்ளனர.

இதெல்லாம் பற்றி இங்கு ஊடகங்களோ , காஷ்மீரை பற்றி ஒப்பாரி வைப்பவர்களோ பேசவது இல்லை.

இப்போது 370 நீக்கபட்டதில் வயிறு எரிந்து கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் பள்ளதாக்கு பிரிவினைவாதிகள் தான் .

ஜம்முவிலும் லடாக்கிலும் நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளது.
ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் கூட இந்திய ஆதரவு நிலைபாட்டில் உள்ளனர்.

தில்லியில் அமைந்துள்ள  அன்ஜுமான் மின்ஹாஜ் இ ரசூல் என்கிற சமுக நல்லினக்க அமைப்பின் தலைவர் மெளலானா சயத் அத்தர் ஹூசைன் 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்த மக்கள் இந்திய ஆதரவு நிலைபாட்டில் இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும் 2014 வெள்ளத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் விரட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் மிக கடுமையான தண்டனை உன்டு. பலரை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துள்ளது.

ஆனால் இங்கோ பயங்கரவாதிகளை மட்டும் தான் ராணுவம் கொல்கிறது. சில சமயங்களில் உதவுபவர்கள் கொல்லப்பட்டதும் உண்டு. ஆனால் அதை தாண்டி தேவையின்றி ஒரு உயிர் கூட கொல்லப்பட்டதில்லை.

இப்படி எல்லைக்குள் இரு பகுதிகள் எல்லைக்கு அப்பால் ஒரு பகுதி என மூன்று பிரிவு மக்கள் இந்தியாவை தேர்ந்தேடுக்கும் பட்சத்தில் ஒரு பகுதியில் மட்டும் பிரச்சினை என்றால் சிந்தித்து பாருங்கள் . இதை தூண்டி விடுவது யார் என சிந்தனை செய்து பாருங்கள் ??

நான் முன்பே சொன்னது போல காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் மேற்கூறிப்பிட்ட கலவரங்கள் , பகிரங்கமாக பயங்கரவாதிகளுக்கு உதவுவது போன்றவை நடக்க காரணம் பாகிஸ்தான் !!
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் அங்கு மட்டும் தான்.

ஆனால் தெற்கு காஷ்மீர் அதாவது ஜம்மு பகுதி மக்களுக்கு இவர்களின் திட்டங்களில் நாட்டம் இல்லை , பயங்கரவாதிகள் இருப்பிடம் தெரிந்தால் போட்டு கொடுத்து விடுவார்கள். பயங்கரவாதிகளுக்கு அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுவது இல்லை. இந்த பகுதி மக்கள் அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் இந்தியாவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். இவர்களுக்கு 370நீக்கப்பட்டதில் எந்த வித வருத்தமும் இல்லை.

இனி லடாக் பகுதியை எடுத்து கொண்டால் , கலாச்சார ரீதியாகவும் , புவியியல் ரீதியாகவும் லடாக் காஷ்மீர் பள்ளதாக்கு (தெற்கு) மற்றும் ஜம்மு (வடக்கு காஷ்மீர்) பகுதியில் இருந்து தொடர்பற்றது.
லடாக்கியர்களுக்கு வடக்கு காஷ்மீரிகள் மீது பயங்கர கோபம் உண்டு காரணம் பாகிஸ்தான் ஆதரவு கைகூலிகளுடைய சுய லாபத்துக்காக லடாக் பகுதியையும் பாகிஸ்தானிடம் பலிகடா ஆக்க முயற்சிப்பது தான். லடாக்கியர்கள் இந்தியாவை மிகவும் நேசிப்பவர்கள்தெற்கு காஷ்மீர் மக்களை போலவே அதனால் வடக்கு காஷ்மீரிகள் ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருப்பதால் இந்த இரு பகுதி மக்களையும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள்.

மேலும் ஜம்மு காஷ்மீருடன் இணைந்திருக்க ஒரு நாளும் நாங்கள் விரும்பியதில்லை என்கிறார்கள் லடாக் மக்கள்.  இதன் காரணமாக லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என 1948ல் இருந்தே பல நீண்ட வருடங்களாக கோரிக்கையை லடாக் மக்கள் வைத்து வருகிறார்கள் அது நேற்று (ஆகஸ்ட் 5 2019 ) நிறைவேறி உள்ளது.

1990களில் வடக்கு காஷ்மீர்(பள்ளத்தாக்கு) பகுதியில் ஏறத்தாழ 6லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் வாழ்ந்து வந்தனர் தற்போது சில ஆயிரம் பேர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.
பல லட்சம் பண்டிட்களை இந்த பிரிவினைவாதிகள் விரட்டி அடித்த போது யாரும் பேசவில்லை , இன்றளவும் அந்த கொடுர செயல்களை புரிந்த பாகிஸ்தான் கைகூலிகளை ஆதரிக்கிறார்கள்.

இந்த பாகிஸ்தான் அடிமைகள் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு  பண்டிட்கள் தடையாக இருந்த காரணத்தால் அவர்களை விரட்ட திட்டமிட்டனர். அதற்காக பள்ளத்தாக்கு பகுதியில் பண்டிட்களுக்கு எதிராக மட்டற்ற காட்டுமிராண்டித்தனம் நிகழ்த்தப்பட்டது பல ஆயிரம் பண்டிட் பெண்கள் இந்த அயோக்கிய கும்பல்களால் கற்பழிக்கப்படனர் , பலர் காணாமல் போயினர், பல பண்டிட்கள் குருரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
பண்டிட் ஆண்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர். பள்ளத்தாக்கு ரத்த பூமியானது.

இத்தகைய கொடுரங்களை சந்தித்த பண்டிட்கள் தற்போது இந்த 370 நீக்கத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைகூலிகளால் இதுவரை ஏறத்தாழ 1லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
5 ஆயிரம் வீரர்கள் மற்றும் 7ஆயிரம் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீருக்காக நடந்த 3 போர்களில்  உயிர் நீத்த 4631வீரர்கள் , காயமடைந்த 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் காஷ்மீருக்குள் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உயர் நீத்த 5 ஆயிரத்திற்கும் மேலான ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள், 7ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்த பல ஆயிரம் வீரர்கள் , ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள், காஷ்மீர் பண்டிட்கள் என பலரை அவமதிக்கும் செயல் தான் 370ஆவது பிரிவுக்கு ஆதரவு கொடுப்பது. இது பச்சையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சமமாகும்.

மேற்குறிப்பிட்டவை எல்லாம் இங்கிருப்பவர்களுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் நவதுவாரங்களை அடைத்து வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை.

பிரிவினைவாதிகளுக்கும் 370 மற்றும் 35Aபிரிவுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள்,

முதலில் தீண்டாமை , லெப்டினன்ட் உமர் ஃபயாஸ் கொலை , ரைஃபிள்மேன் அவுரங்கசீப் கொலை, லடாக்,ஜம்மு மற்றும் பண்டிட் மக்களின் உணர்வுகள், இதுவரை தினந்தோறும் உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் , காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் துன்புறுத்தப்படும் நாட்டுபற்றுமிக்கவர்களுக்கும் ஏன் குரல் கொடுக்கவில்லை.

இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என தெரியாதா இவர்களுக்கு??

புல்வாமா தாக்குதலை பார்த்த பின்னர் கூட புத்தி வரவில்லையா ??

இந்த 370நீக்கம் நிச்சயம் வரவேற்க தகுந்தது இதை யார் செய்திருந்தாலும் இந்தியராக முழு மனதோடு வரவேற்றிருப்போம் எங்கள் எண்ணமும் இத்தனை நாட்கள் அதுவாகவே இருந்தது. எந்த கட்சியோ , எந்த மதமோ தேசத்தின் பக்கம் நில்லுங்கள். இது நமது தேசம் !!

#இந்தப்_பதிவை_அதிகமாக_பகிர்ந்து_உண்மையை_பரப்புங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்திற்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

#வந்தே_மாதரம்
#ஜெய்ஹிந்த்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Leave a Reply

Your email address will not be published.