Breaking News

விமானப்படைக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகள் – மத்திய அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவை ஆகாயத்தில் பறந்து வரும் எதிரி போர் விமானங்களை தாக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகும்.

ஆகாஷ் ஏவுகணை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மேலும், இது ஒளியை விட 2.5 மடங்கு வேகமாக சென்று தாக்கும் வல்லமை பொருந்தியது. இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்டுள்ள ஆகாஷ் ஏவுகணை முழுவதுமாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டதாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைப்பகுதிகளை கடந்து தாக்க முயன்றுள்ளது. இதன் காரணமாக புதிதாக வாங்கப்படும் ஆகாஷ் ஏவுகணைகள் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Daily thanthi

Leave a Reply

Your email address will not be published.