Breaking News

பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

கையால் தூக்கிச் சென்று பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நவீன ஏவுகணை திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதன்படி (எம்.பி.-ஏ.டி.ஜி.எம். ) எனப்படும் கையால் தூக்கி சென்று இலக்கை தாக்கி அழிக்க கூட்டிய ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது வெற்றி இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.டி.ஆர்.டி.ஓ. தலைவர் சத்தீஷ் ரெட்டி கூறியது, இந்தியாவின் ஏவுகணை திட்டத்தில் இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது இந்த ஏவுகணையை போர் காலங்களில் தூக்கி சென்று இலக்கை நோக்கி தாக்கி அழித்திட முடியும் என்றார்.

Dinamalar

Leave a Reply

Your email address will not be published.