Breaking News

லெப்டினன்ட் கலோனல் தான் சிங் தாபா

லெப்டினன்ட் கலோனல் தான் சிங் தாபா

நேபாளி தம்பதியர்களுக்கு 10 ஜீன் 1938 அன்று ஹிமாச்சலின் சிம்லாவில் பிறந்தார் தாபா அவர்கள்.சிறுவயதிலேயே போர்க்குணம் பெற்றிருந்த அவர் இந்திய இராணுவத்தின் 8வது கூர்கா ரைபிள்சில் 28 ஆகஸ்டு 1949ல் இணைந்தார்.கூர்கா வீரர்கள் என்றாலே இளமையிலேயே போர்க்குணம் வந்துவிடும்.தனது பணியை தொடங்கினார்.

இந்தியச் சீனப் போர் 1962

இந்தியச் சீனப் போரின் போது லடாக்கின் வடக்கு பான்கோங் ஏரியின் பகுதியில் இருந்த சிரிஜிப் சமவெளியை கைப்பற்ற படைகளுக்கு உத்தரவிடப்பட்டது.இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் நம்மால்
 Shushul வான் தளத்தை பாதுகாக்க முடியும்.

எனவே இந்தப் பகுதியில் சீன வீரர்களை எதிர்கொள்ள 1/8 கூர்கா ரைபிள்ஸ் வீரர்கள் தயாராக இருந்தனர்.இங்குள்ள ஒரு வெளிப்புற நிலையில் இருந்த “சி” கம்பெனியை தலைமை தாங்கினார் மேஜர் தான் சிங் தாபா.

20 அக்டோபர் சீனப் படைகள் இந்தப் பகுதியை தாக்க தொடங்கின.கனரக ஆர்டில்லரி மற்றும் மோர்ட்டார்களை கொண்டு காவல் நிலையை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர்.

இரண்டு மணிநேரமாக நடந்த கடும் சண்டையில் அந்த இடமே தீக்கிரையானது.தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.ஆனால் நமது கூர்கா வீரர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர்.மேஜர் தான் சிங் தாபா தலைமையில் நமது வீரர்கள் சீனப் படைகளுக்கு கடும் சேதத்தை விளைவித்தனர்.

மீண்டும் இரண்டாவது முறையாக கடும் ஆர்டில்லரி தாக்குதலுக்கு பிறகு சீனப்படைகள் நிலை மீது தாக்குதலை தொடங்கினர்.மீண்டும் ஒரு முறை
நமது வீரர்கள் மிக கடுமையாக போரிட்டு சீனப்படைகளுக்கு கடும் சேதத்தை விளைவித்தனர்.

 தங்களுக்கு முழு பலத்தை திரட்டி சீனப் படைகள் மூன்றாவது மட்டும் கடைசி அலையாக தாக்குதலை தொடங்கின.இந்த முறை அவர்களுக்கு டேங்க் துணை இருந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருந்த மேஜர் தாபா அவர்களின் படைப் பிரிவு தனது கடைசி தோட்டா இருக்கும் வரை போரிட்டது.மேஜர் தாபா கைகளால் சண்டையிட்டு பல சீன வீரர்களை வீழ்த்தினார்.சீனர்களுக்கு எண்ணிக்கை பலம் கைகொடுக்க கடைசியாக நமது நிலையை அடைந்தனர்.

அவரது வீரமிகுந்த தலைமை மற்றும் தைரியான நடவடிக்கை காரணமாக அவருக்கு பரம்வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.அவர் மரணமடைந்துவிட்டார் என நினைத்தது இராணுவம்.மேஜரின் மனைவி தான் பரம்வீர்சக்ரா விருதை பெற்றார்.

ஆனால் பின்னாளில் தான் அவர் போர்க்கைதியாக சீன கொண்டு சென்றது கண்டறியப்பட்டது.இராணுவ முறைகளுக்கு மாற்றாக அவர் சீன சிறைகளில் சித்ரவதை செய்யப்பட்டார்.

சீனப் படைகளுக்கு கடும் சேதம் விளைவித்ததாக அவருக்கு கடுமையான தண்டைகள் வழங்கப்பட்டது.மேலும் இந்தியாவிற்கு எதிராக பேசி குறிப்பு தராததாலும் அவர் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்தார்.

பின்னாளில் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் இராணுவத்தில் சேவை செய்யத் தொடங்கினார்.அவர் லெப் கலா ஆக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த செப்டம்பர் 5 ,2005ல் இயற்கை காரணங்களால் மரணம் அடைந்தார்.

அவருக்கு ஒரு மனைவியும் , பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர்.

சீன-இந்திய எல்லை முழுதும் நடைபெற்ற போரில் நமது வீரர்கள் சீனர்களுக்கு பல இடங்களில் மரணம் பயம் காட்டி நின்று அடித்துள்ளனர்.அவர்களின் வீரவரலாறு இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.