Breaking News

ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு மேம்படுத்த சீனாவுக்கு உதவும் இரஷ்யா

ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு மேம்படுத்த சீனாவுக்கு உதவும் இரஷ்யா

missile-attack warning system என்ற அமைப்பை மேம்படுத்த சீனாவுக்கு இரஷ்யா உதவி வருவதாக இரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.இதன் மூலம் சீனாவின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இரஷ்யா மட்டுமே இத்தகைய தொழில்நுட்பம் கொண்டிருப்பதாகவும் புதின் தெளிவுபட கூறியுள்ளார்.

 “நான் மிகப் பெரிய இரகசியத்தை இங்கு வெளிப்படுத்துவதாய் எனக்கு தோன்றவில்லை.எனினும் இது தெளிவானது தான்.நாங்கள் தற்போது எங்கள் சீனக் கூட்டாளி
 missile-attack warning system அமைப்பு மேம்படுத்த உதவி வருகிறோம்” என புதின் கூறியுள்ளார்.

missile attack warning system என்பது  ground-based radars மற்றும் satellite arrays in Earth’s orbit ஆகியவை உள்ளடக்கியதாகும். இதன் உதவியுடன் எதிரி நாடுகள் பலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல் மற்றும் அந்த ஏவுகணையின் பாதை ஆகியவற்றை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.இதன் மூலம் கிடைக்கும் தகவல் ஒருங்கிணைந்த command center-க்கு அனுப்பப்பட்டு அங்கு மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும்.

நண்பர்களே நாம் முன்னுமே கூறியபடி சர்வதேச அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை.நிரந்தர எதிரிகளும் இல்லை.

மேலும் அமெரிக்காவின்  பொருளாதார தடையால் இரஷ்யாவும் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.