கடற்படை மிக்-29 பயிற்சி விமானம் விபத்து- நடந்தது என்ன ?

கடற்படை மிக்-29 பயிற்சி விமானம் விபத்து- நடந்தது என்ன ?

இந்திய கடற்படையின் வான் பிரிவை சேர்ந்த மிக்-29 பயிற்சி விமானம் கோவாவிற்கு வெளியே ஒரு கிராமத்தில் சனியன்று விபத்துக்கு உள்ளானது.இரு விமானிகளும் பத்திரமாக வெளியேறியுள்ளனர் என
 Indian Navy Flag Officer, Goa, Rear Admiral Philipose George Pynumootil கூறியுள்ளார்.இரு விமானிகளும் விமானத்தில் பிரச்சனையை உணர்ந்த பின் பொதுமக்கள் அதிக உள்ள பகுதியை தவிர்த்து பெரும் சேதத்தை தடுத்துள்ளனர்.

விமானம் எப்போதும் போல பயிற்சியில் இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரி கூறியுள்ளார்.கோவா தலைநகருக்கு வெளியே 15கிமீ தொலைவில் உள்ள வெர்னா என்னுமிடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.ஒரு கிமீ தொலைவுக்கு விமானத்தின் பாகங்கள் சித
றி கிடக்கின்றன.

கோவாவின் டபோலிம் என்னுமிடத்திற்கு அருகே உள்ள ஐஎன்எஸ் ஹான்சா படைத்தளத்திற்கு சொந்தமானது இந்த விமானம்.என்ஜினில் தீ பற்றி கொண்டது விபத்துக்கு காரணமானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. Capt M Sheokhand மற்றும் Lt Cdr Deepak Yadav ஆகிய இரு விமானிகளும் பத்திரமாக வெளியேறினர்.

வீரர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு Vasco என்னுமிடத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்திய கடற்படை மற்றும் கோவா காவல்துறை அந்த இடத்தை சுற்றிவளைத்து சிதறல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மிக்-29 விமானம் தளத்தில் இருந்து பறந்த உடனேயே தொகுதிகளாக வந்த பறவைகள் விமானத்தை தாக்க விமானத்தின் இடது என்ஜினில் புகைவர வலது என்ஜின் தீப்பற்றி கொண்டது.

விபத்தில் எந்தவித உயிர்சேதம் ஏற்படவில்லை.இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.