Breaking News

ஐஎன்எஸ் விசால் குறித்த புது தகவல்கள்

ஐஎன்எஸ் விசால் குறித்த புது தகவல்கள்

ஐஎன்எஸ் விசால் என்பது இந்தியா தற்போது சொந்தமாக கட்டி வரும்  விக்ராந்திற்கு பிறகு இந்தியா சொந்தமாக கட்ட உள்ள ஆகப் பெரிய விமானம் தாங்கி கப்பல் ஆகும்.

வெகுநாட்களாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தற்போது விசால் திட்ட நகர்வு குறித்த புது தகவல்கள் வெளிவந்துள்ளன.விசால் 65000 டன்கள் எடையுடையதாக இருக்கும் என்பது முன்னரே நாம் அறிந்துள்ளோம்.தற்போது கட்டி வரும் விக்ராந்த் 40,000டன்கள் எடையுடையது.எனவே விசால் ,விக்ராந்தை விட பெரிய கப்பலாகவும் அதிநவீன தரத்திலானதாகவும் இருக்கும்.

CATOBAR(most likely EMALS) வடிவமைப்பில் இந்த புதிய விசால் விமானம் தாங்கி கப்பல் வரும்.அதாவது Catapult Assisted Take-Off But Arrested Recovery என்ற தொழில்நுட்பத்தில் வரும்.

ஆனால் விக்ராந்த் STOBAR எனப்படும் Short Take-Off Barrier-Arrested Recovery என்ற தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது.இது ஒன்றும் இல்லை விமானம் தரையிறங்கும் ஓடுபாதை அமைப்பு தான்..விமானம் தலையிறங்க,வான் எழும்ப இந்த அமைப்புகள் உதவும்.

மேலும் இது எலக்ட்ரிக் புரோபல்சன் உடன் வருகிறது.இந்த திட்டம் தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.